News August 18, 2025
விருதுநகரில் ஆக. 22-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகரில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 11 மணியளவில் புதிய ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும் விவசாயிகள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
விருதுநகர்: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 14, 2026
விருதுநகர்: பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறிப்பு; போலீஸ் கைது.!

விருதுநகர், ஆமாத்தூரைச் சேர்ந்த ஏட்டு சுந்தர்ராஜ் (35) என்பவர், விருதுநகரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி பெண்ணுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் சுந்தர்ராஜ் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 14, 2026
சிவகாசி: வாகன சோதனையில் சிக்கிய பட்டாசுகள்

வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் விலக்கில் எஸ்.ஐ., முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முழுமை அடையாத 30 ஷாட் கொண்ட 350 பாக்கெட் பேன்சி ரக பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. லோடு ஆட்டோவுடன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, மார்க்கநாதபுரம் டிரைவர் இம்மானுவேலை (28) கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


