News April 8, 2024
ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கியுள்ளது

இந்தியாவிற்கு ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கியுள்ளதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். சொந்த நாட்டு மக்கள் மணிப்பூரில் ரத்தக் கண்ணீர் வடித்த போது அங்கு செல்லாத மோடி, தமிழக வெள்ளத்தை பார்வையிட வராத அவர், வாக்கு கேட்க மட்டும் வருகிறார் எனக் குற்றம்சாட்டிய அவர், ஹிட்லர், முசோலினியால் கூட சிந்திக்க முடியாத அவலங்களை தனக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி செய்வதாக விமர்சித்தார்.
Similar News
News March 18, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்

இந்தியா சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இரட்டிப்பாக்கியுள்ளது. சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ‘அக்வா டைட்டன்’ எண்ணெய் கப்பல், மார்ச் 21 அன்று கர்நாடகாவின் புதிய மங்களூரு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்தியா கடந்த 1 வாரத்தில் ரஷ்யாவிடமிருந்து 30 மில்லியன் பேரல் எண்ணெயை, ஒரு பேரல் $98-க்கு வாங்கியுள்ளது. மொத்தம் 7 கப்பல்களை ரஷ்யா சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பிவிட்டுள்ளது.
News March 18, 2026
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. வந்தது அறிவிப்பு

நாளை (மார்ச் 19) தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து, 20-ம் தேதி வேலை நாளாக இருக்கும். அதன்பின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 21-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வருகிறது. அதாவது அடுத்த 4 நாள்களில் 3 நாள்கள் விடுமுறையாகும்.


