News August 18, 2025
கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்கள் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 54 பேரை போலீசார் ஒரே நாளில் அதிரடியாகக் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவின்படி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், பேரளம் உட்பட மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள், வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர்கள் என்று இதுவரை போலீசார் 54 பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News August 18, 2025
திருவாரூர்: உங்கள் Phone காணாமல் போனாலும் No Tension!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<
News August 18, 2025
திருவாரூர்: 31-ம் தேதி வரை கால அவகாசம்!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகர், கோட்டூர் தட்டாங்கோவில் மற்றும் வண்டாம்பாளை, கிடாரங்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வருகிற 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க..
News August 18, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (17.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!