News April 8, 2024

குஜராத் அணியை கலங்கடித்த யாஷ் தாக்கூர்

image

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வீரர் யாஷ் தாக்கூரின் பந்துவீச்சு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 164 என்ற இலக்கை, குஜராத் அணி தொட முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் யாஷ் தாக்கூர். கில், விஜய் சங்கர் என குஜராத்தின் முக்கிய விக்கெட்டுக்களை இவர் வேட்டையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Similar News

News November 5, 2025

அதிருப்தியில் இருக்கிறாரா திமுகவின் மாஜி அமைச்சர்?

image

அமைச்சர் பதவி பறிபோன பிறகு அப்செட்டில் இருந்த செஞ்சி மஸ்தான், எப்படியோ விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியை வாங்கிவிட்டார். ஆனாலும், அவருக்கு பழையபடி கட்சியினர் மத்தியில் மவுசு இல்லையாம். இதனால், தலைமையிடம் வக்ஃபு வாரிய தலைவர் பதவியை அவர் கேட்டதாக பேசப்படுகிறது. ஆனால், தலைமை அசைந்துக் கொடுக்காததால் மஸ்தான் அதிருப்தியில் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

News November 5, 2025

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவுள்ளாரா ரஜினி?

image

ரஜினியின் அடுத்த இயக்குநர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், நெல்சன், சுந்தர்.சி. இருக்கின்றனர். இதில், லேட்டஸ்ட்டாக ராஜமௌலி இணைந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது ராஜமௌலி இயக்கிக்கொண்டிருக்கும் மகேஷ் பாபு படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோல் இருக்கிறதாம். அந்த ரோல் இந்திய ஆன்மிகம் குறித்தது என்று சொன்னவுடன் உற்சாகமான ரஜினி, கேரக்டர் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருப்பதாக பேசப்படுகிறது.

News November 5, 2025

தனியே களமிறங்கும் திட்டத்தில் அண்ணாமலை?

image

தனிக்கட்சி தொடங்கினால் சொல்கிறேன் என அண்ணாமலை சொன்னதில் இருந்து தமிழக பாஜகவில் ஒருவித பரபரப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த பரபரப்பு இன்னும் அடங்கிய பாடில்லை என்கின்றனர். அதாவது, தற்போதைய பாஜக மாநில தலைவர் தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கையைத் தீவிரமாக்கி வருவதாக அண்ணாமலை ஆதங்கப்பட்டாராம். தனியே களமிறங்கும் திட்டத்துக்கு துணையாக, பிற கட்சி நிர்வாகிகள் சிலரிடமும் பேசுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!