News August 18, 2025
தர்மபுரி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் (அ) 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 4, 2026
பாப்பிரெட்டிப்பட்டி: 7 புதிய வீடுகள் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் ஊராட்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதிதாக 7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் சதீஸ், அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
News March 4, 2026
தருமபுரி: ஆற்றில் குளித்தவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல்: திருக்கோவிலுார் அருகே உள்ள பெருமணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 24. ஓசூரிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஞாயிறு அன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு தடை செய்யப்பட்ட கோத்திக்கல் பரிசல் துறை அருகே குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கினார். இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News March 4, 2026
தருமபுரி: ஓடிச் சென்று பார்த்த MP

தனியார் விவாத நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேகர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி MP நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், இது குறித்து திமுக கழக முன்னோடிகளுடன் கலந்தாலோசித்தார்.


