News August 18, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News November 5, 2025
சிவகாசி: செல்போன் கடைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்

சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் கூரையை பிரித்து கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 2 நாட்களுக்கு முன் அருகில் உள்ள செல்போன் கடையில் திருடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு செல்போன் கடையில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 5, 2025
விருதுநகர்: இந்த எண்களை கட்டாயம் SAVE பண்ணிக்கோங்க

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
சிவகாசியில் தயாராகும் “5டி” காலண்டர்

2026 புத்தாண்டை முன்னிட்டு, சிவகாசியில் காலண்டர் உற்பத்தி விறு விறுப்படைந்துள்ளது. தினசரி காலண்டர்கள், டேபிள் காலண்டர்கள், பிவிசி காலண்டர்கள், ஆர்ட் பேப்பர் டெய்லி காலண்டர்கள், பேன்ஸி டை கட்டிங் என பல்வேறு வகை காலண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஒரே காலண்டரில் 5 கோணங்களில் வெவ்வேறு படங்களை வெளிப்படுத்தும் 5டி காலண்டர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


