News August 18, 2025

திருவாரூர்: உங்கள் Phone காணாமல் போனாலும் No Tension!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<>சஞ்சார் சாத்தி<<>>’ என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க. SHARE பண்ணுங்க!

Similar News

News March 12, 2026

திருவாரூர்: நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு திரட்டல்

image

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் மேற்கு ஒன்றியம், கோவிந்தகுடி கடைவீதியில் சீமான் பேச்சு மற்றும், மாநாட்டுப் பாடலை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்க செய்தும், துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் கொடுத்தும், நாம் தமிழர் கட்சி நன்னிலம் வேட்பாளர் பேராசிரியர் தேன்மொழி திலீப் குமாருக்கு ஆதரவு திரட்டப்பட்டது. இந்நிகழ்வில் வலங்கைமான் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 12, 2026

திருவாரூர்: நில அளவை உதவி ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

image

மன்னார்குடியைச் சேர்ந்த விக்டர்சாலமன் கடந்த 2014-ம் ஆண்டு பட்டா மாறுதல் செய்ய நிலஅளவை உதவி ஆய்வாளர் செல்வராஜனை அணுகிய போது அவர் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். விக்டர்சாலமன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் லஞ்சம் கொடுக்கும்போது போலீசார் செல்வராஜனை கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் செல்வராஜனுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

News March 12, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!