News August 18, 2025

நெல்லை மக்களே ஆன்லைன் லோன் உஷார்…!

image

நமது நெல்லை மக்களே, உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புகார்களுக்கு: 1930 அழையுங்க… நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு SHARE செய்து உஷார்படுத்துங்க…!

Similar News

News August 20, 2025

நெல்லை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

நெல்லை மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News August 20, 2025

தமிழகத்தில் முதல் முறையாக நெல்லையில் அறிமுகம்

image

நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழக அளவில் முதல் முறையாக நோயாளிகளின் பதிவு மற்றும் சிகிச்சை விபரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு தனி செயலி மூலம் அவர்களுக்கு விவரங்களை தெரிவிக்கும் ஹெச் எம் ஐ எஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் ஏற்கனவே எடுத்த சிகிச்சை விபரங்களை அடுத்து வரும் நாட்களில் காட்டி மேல் சிகிச்சை பெற முடியும். *எல்லாரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

நெல்லை: ரயில் சேவையில் மாற்றம்!

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது நடைமேடை அமைக்கும் பணிக்காக நெல்லை – திருச்செந்தூர் நாளை காலை 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்(56729) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை – நெல்லை காலை 10.05 மணிக்கு புறப்படும் ரயில் சேரன்மகாதேவி, நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல மேலும் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!