News August 18, 2025
புதுச்சேரி: பெண்ணிடம் ரூ.1.08 லட்சம் மோசடி

தட்டாஞ் சாவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, வாட்ஸ்ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறியபடி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால், அதற்கான லாபமும், செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
புதுவை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

புதுவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 20, 2025
டெல்லியில் 3 நாள் மாநாடு – புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு டெல்லியில் ஆக.23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவர் செல்வம் பங்கேற்கிறார். மேலும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டையொட்டி, 23-ம் தேதி டெல்லி முதல்வர் ரேகா குப்தா விருந்தளிக்கிறார். 24-ல் முறைப்படி இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துப் பேசுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
புதுச்சேரியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, 1 ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆக.22-ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0413- 2331408/2220105 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.