News August 18, 2025
திருவாரூர்: 31-ம் தேதி வரை கால அவகாசம்!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகர், கோட்டூர் தட்டாங்கோவில் மற்றும் வண்டாம்பாளை, கிடாரங்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வருகிற 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க..
Similar News
News August 20, 2025
திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! (<<17460306>>பாகம்-2<<>>)
News August 20, 2025
திருவாரூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
திருவாரூர்: ரூ.1 கோடி வரை கடன் உதவி-கலெக்டர்

தமிழக அரசினுடைய ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இதற்கான திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அரசால் வழங்கப்படுகிறது என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.