News August 18, 2025

தீபாவளி முன்பதிவு… இன்று காலை 8 மணிக்கு ரெடியா..!

image

தீபாவளி அக். 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் புக்கிங் இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, அக்.17-ம் தேதிக்கான டிக்கெட்டை இன்றும், அக்.18-ம் தேதிக்கான டிக்கெட் நாளையும், அக்.29-ம் தேதிக்கு வரும் 20-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெடியா நண்பர்களே!

Similar News

News March 14, 2026

மார்ச் 14: வரலாற்றில் இன்று

image

▶1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது. ▶1998 – சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். ▶1918 – தென்னிந்திய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் பிறந்த தினம். ▶1965 – பாலிவுட் நடிகர் அமீர் கான் பிறந்த தினம். ▶1986 – தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த தினம். 1883 – பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்.

News March 14, 2026

இஸ்ரேல் – ஈரான் போரில் இதுவரை 2,000 பேர் பலி!

image

கடந்த 2 வாரங்களாக ஈரான், லெபனான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம், இப்போரில் உயிரிழந்த US வீரர்களின் எண்ணிக்கை 13-ஐ எட்டியுள்ளது. இதில் லெபனான் மீதான தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 773 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News March 14, 2026

எரிபொருள் விலை எதிரொலி.. விமான டிக்கெட் விலை உயர்வு!

image

எண்ணெய் விலை உயர்வு காரணமாக, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் எரிபொருள் கட்டணத்தை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே AirIndia கூடுதல் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், Indigo-வும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. நாளை முதல், சேவைகளைப் பொறுத்து கூடுதலாக ₹425-₹2,300 வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், spicejet, Akasa air நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.

error: Content is protected !!