News August 18, 2025
பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகள் எத்தனை?

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளை குறிவைத்துள்ளது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிபெற வாய்ப்புள்ள 35 தொகுதிகளை பாஜக தேர்வு செய்துள்ளதாம். இம்மாத இறுதியில் மீண்டும் தமிழகம் வரும் பாஜக அமைப்பு பொ.செ., பிஎல் சந்தோஷ் இதுபற்றி EPS-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தமுறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4-ல் வென்றது.
Similar News
News March 10, 2026
BREAKING: செந்தில் பாலாஜி பரபரப்பு அறிவிப்பு

கரூர் வழக்கு தொடர்பாக வரும் 17-ம் தேதி CBI அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது, CBI எழுப்பும் கேள்விகளுக்கு தான் உரிய விளக்கத்தை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று, CBI அனுப்பிய சம்மனை அவர் ஏற்க மறுத்ததால், E-மெயில் மூலமாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனது X பக்கத்தில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
News March 10, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு!

தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹15,050-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹1,20,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இன்று காலை சரிந்த தங்கம், தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
News March 10, 2026
அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்த சீனா

ஈரானின் புதிய உச்சத் தலைவராக யார் வந்தாலும் குறிவைப்போம் என அமெரிக்கா, இஸ்ரேல் கூறும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்ற சீனா, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. மேலும், அனைத்து தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


