News August 18, 2025

நாகை–இலங்கை கப்பல் சேவைகளில் சலுகை

image

நாகை துறைமுகம் முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 3 பகல் 2 இரவு தங்கும் ஏற்பாட்டுடன் கப்பல் டிக்கெட் சலுகை ரூ.9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு: முன்பதிவு கால நீட்டிப்பு

image

2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர்கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 20.2025 இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ,கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயனடையாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News August 18, 2025

மீன் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சி

image

நாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் மீன் பதப்படுத்துதல் மதிப்பு கூட்டல் மற்றும் கழிவு மேலாண்மையில் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து ஆக 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் பயிற்சிகள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் இன்று 18ந் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் உள்ள மெட்ரோ மீன்பதன தொழில்நுட்ப கூடத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

மருத்துவ சேர்க்கை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். ஆட்சியர்

image

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ கல்லூரி சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என நாகப்பட்டினம் ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!