News April 8, 2024
ஊழியர்களுக்கு அதிர்ச்சி தந்த காக்னிசன்ட்

ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மற்ற நிறுவனங்களிலும் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 1.7% சரிந்திருந்தது.
Similar News
News March 17, 2026
தூத்துக்குடி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பழைய திட்டங்களில் முறைகேடு புகாரால் விசாரணையில், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனரின் உத்தரவால் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாகர்கோவில், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் குப்பை உரமாக்கும் திட்ட உள்ளிட்ட பணிகளில் ஊழல் என்று ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு. நேற்று ஆணையர் பிரியங்கா நேரில் உத்தரவு நகலை வழங்கினார். விசாரணை தொடர்கிறது.
News March 17, 2026
பள்ளியிலேயே மாணவிகள் மது குடிக்கும் காட்சி..EPS வேதனை

சென்னையில் திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பேசிய EPS, திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒட்டுமொத்த TN மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சட்டினார். பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டு சாடிய அவர், பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையளிப்பதாக தெரிவித்தார். மேலும், கிட்னி திருட்டு, மணல் கொள்ளையை திமுக அரசு தடுக்கவில்லை என்றார்.
News March 17, 2026
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. ஹேப்பி நியூஸ்

ஜூன் மாதம் வரையிலான ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை மாநிலங்கள் முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோதுமை, அரிசி ஏப்.1 வரைக்குமான தேவைப்படும் கையிருப்பு அளவை விட சுமார் 185% அதிகமாக இருக்கிறது. அதிக அளவு தானியங்கள் இருப்பு உள்ளதாலும், அடுத்த சில வாரங்களில் புதிய கோதுமை கொள்முதல் தொடங்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது


