News August 17, 2025

நாளை டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் நாளை டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Similar News

News March 10, 2026

அடித்து துன்புறுத்தியதாக அமித் மிஸ்ரா மீது மனைவி வழக்கு

image

IND Ex கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீது அவரது மனைவி கரிமா நீதிமன்றத்தில் வரதட்சணைக் கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். அமித் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் பல நாள்கள் பட்டினி போட்டு, அடித்து துன்புறுத்தியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது மிஸ்ராவுக்கு எதிராக கரிமா தாக்கல் செய்த 3-வது சட்ட வழக்கு. ஏற்கெனவே குடும்ப வன்முறை & ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்திருந்தார்.

News March 10, 2026

ட்ரோன் பிசினஸில் களமிறங்கும் டிரம்ப் மகன்கள்

image

ஈரானுடன் போர் நடக்கும் சூழலில் டிரம்ப்பின் மகன்கள் எரிக் & டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ட்ரோன் பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஆட்டோனமஸ் டிரோன்கள் தயாரிக்கும் Powerus நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். போர் தீவிரமடைந்து டிரோன் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் இது நடந்துள்ளது. போர் நடைபெறும் நேரத்தில் டிரம்ப் மகன்கள் ஆயுத வியாபாரத்தில் நுழைந்துள்ளது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

News March 10, 2026

சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்ட செடி!

image

சர்க்கரை சாப்பிட ஆசை இருந்தும், நீரிழிவு நோய் வந்துவிடும் என் பயமா? இச்செய்தி உங்களுக்கே! பேக்டரிகளில் தயாரிக்கப்படும் சர்க்கரைக்கு மாற்றாக சீனித்துளசி (Stevia) செடி உள்ளது. சர்க்கரையை விட 150- 300 மடங்கு இனிப்பு கொண்ட இதன் இலைகளில் கலோரிகளும் குறைவாம். பிரேசில், உருகுவே நாடுகளில் தோன்றிய இச்செடியை, சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட அளவிற்கு உட்கொள்ளலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

error: Content is protected !!