News August 17, 2025

திமுகவுக்கு புதிய தலைவலி.. எப்படி சமாளிக்க போகிறது?

image

NDA-வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது திமுகவுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ‘INDIA’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, அந்த கூட்டணி வேட்பாளரை ஆதரிக்குமா?, தமிழர் என்ற அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ‘INDIA’ கூட்டணி வேட்பாளரை திமுக ஆதரித்தால் அதை கூறியே பாஜக அரசியல் செய்ய வாய்ப்புள்ளது. உங்க கருத்து என்ன?

Similar News

News August 22, 2025

காபி பிரியர்களே உஷார்!

image

தினசரி 2 கப் காபி குடிப்பது உடல்நலனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுதான் இதுவரை டாக்டர்கள் பரிந்துரைத்தது. ஆனால், காபி குடிப்பது உடல் சத்துகளை உட்கவர்வதை பாதிப்பதாக, அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. காபியில் உள்ள சில உட்பொருள்கள், நமது உணவிலிருந்து இரும்பு, வைட்டமின் பி, சி, டி, சத்துகள் உட்கவர்வதை தடுக்கிறது. மேலும், நெஞ்சரிச்சலையும் காபி அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. SHARE IT!

News August 22, 2025

விஜய் மனைவியின் சொத்து இவ்வளவு கோடியா..!

image

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சங்கீதாவின் தந்தை சோர்ணலிங்கம், இங்கிலாந்தில் பிரபல தொழிலதிபராக உள்ளார். தந்தையின் தொழிலால் ஆடம்பரமான பொருளாதார சூழலில் சங்கீதா வளர்ந்திருக்கிறார். ZEE NEWS தகவல்படி, அவரது சொத்து மதிப்பு ₹400+ கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கணவன் விஜய் சினிமாவில் கொடிகட்டி பறந்தபோதும், சங்கீதா சினிமா வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 22, 2025

நடிகை ரித்விகாவின் திருமணம் தள்ளி போனது..!

image

பிக்பாஸ் 2-வது சீசன் வின்னரும் பிரபல நடிகையுமான ரித்விகாவின் திருமணம் கடைசி நேரத்தில் தள்ளி போயுள்ளது. இவருக்கும் வினோத் லட்சுமணன் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆக. 27-ல் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக ரித்விகா தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் ரித்விகா நடித்துள்ளார்.

error: Content is protected !!