News April 7, 2024
வாய்ப்புண் விரைவில் குணமாக இதை பண்ணுங்க!

ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண்ணால் அவதிப்படுவோர் மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம். பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். பொதுவாக, துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.
Similar News
News March 18, 2026
நான்கரை வயது சிறுவன் பலி.. சீறிய நயினார்

மருத்துவத் துறையை சீரழித்து மக்கள் உயிருடன் விளையாடும் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருச்சி கண்ணனூரில் டாக்டர் இல்லாததால் நான்கரை வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு என ஐந்தாண்டுகளாக வீண் பெருமை பேசும் திமுக அரசு போதிய டாக்டர்களைக்கூட நியமிக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
News March 18, 2026
FLASH: அதிமுக EX அமைச்சர்கள் 7 பேருக்கு எதிராக மனு!

அதிமுக EX அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை ED விசாரிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக MP கிரிராஜன் இந்த மனுவைத் தொடர்ந்துள்ளார். SP வேலுமணி, தங்கமணி, MR விஜயபாஸ்கர், KP அன்பழகன், C விஜயபாஸ்கர், காமராஜ், KC வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) விசாரித்து வரும் நிலையில், இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
News March 18, 2026
காங்., திமுகவினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி திமுக – காங்., கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பம் எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அப்படி இருக்கையில், பங்குனி அமாவாசை என்பதால் காங்கிரஸ், திமுகவினர் போட்டிபோட்டு அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக, திமுக சார்பில் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காத நிலையில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.


