News August 17, 2025
ஒடிஷா முன்னாள் CM ஹாஸ்பிடலில் அனுமதி

ஒடிஷா முன்னாள் முதல்வரும், BJD கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் (78) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வால் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை ஹாஸ்பிடல் விரைவில் வெளியிடும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானதால், டாக்டர்கள் அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தனர்.
Similar News
News March 11, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 11, 2026
நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

‘பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான கோரைப் பாயில் படுப்பது ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். கர்ப்பிணிகள் பாயில் உறங்கினால், முதுகு & இடுப்பு வலி வராது. மேலும், பாயில் சமமாகப் படுக்கும்போது உடலில் ரத்தம் சீராகப் பாய்கிறது. இத்துடன், கோரைப் பாய் சூட்டை உள்வாங்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
News March 11, 2026
BREAKING: எதிர்பாராத திருப்பம்.. புதிய கூட்டணி

TN அரசியலில் புதிய திருப்பமாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சசிகலா சந்தித்துள்ளார். 30 நிமிடங்களுக்கு மேலான இச்சந்திப்பில் தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுகிறது. முன்னதாக, TVK-வுடன் சசிகலா கூட்டணி பேச்சு நடத்தியதாக தகவல் கசிந்தது.


