News August 17, 2025
உள்ளாடை விஷயத்தில் இந்த தவறை செய்யாதீங்க

உள்ளாடைகளை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உள்ளாடைகளை பொறுத்தவரை நோய் தொற்றுகளை அதிகரிக்கும் என்பதாலும், அந்தரங்க உறுப்புகளை பாதுகாக்கும் என்பதாலும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னரும் முறையாக துவைக்க வேண்டும். ஈரமான உள்ளாடைகள் தோல் எரிச்சல், தடிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் சூரிய ஒளியில் உலர்த்துவது நல்லது என அறிவுறுத்துகின்றனர். SHARE IT.
Similar News
News March 8, 2026
ஜனாதிபதிக்கு நேர்ந்தது வெட்கக்கேடானது: PM மோடி

மேற்கு வங்கத்திற்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை அம்மாநில CM மம்தா பானர்ஜி நேரில் வரவேற்காததை வெட்கக்கேடானது என PM மோடி சாடியுள்ளார். பழங்குடியை சேர்ந்த முர்மு வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; TMC அரசு அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்றும், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு TMC-ன் நிர்வாகமே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 8, 2026
SPORTS 360°: பைனலுக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

*ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷயா சென் பைனலுக்கு முன்னேறினார். *AFC மகளிர் ஆசியக் கோப்பையின் லீக் போட்டியில் இந்தியாவை 0-11 என்ற கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. *காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஜிபி ஃபார்முலா 1 தொடரில் இருந்து வெர்ஸ்டப்பன் விலகினார். *ஹாக்கி மகளிர் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் கடைசி வாய்ப்பாக இந்திய அணி உருகுவேவை எதிர்கொள்கிறது.
News March 8, 2026
ஏசியை பயன்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிக்கலாம்!

பல இடங்களில் வெயில் உச்சத்தை எட்டிவரும் நிலையில், வீட்டில் AC பயன்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது. இந்நிலையில் மிக குறைந்த மின்சாரத்தில் AC-யை பயன்படுத்த நிபுணர்கள் கூறும் டிப்ஸ் இதோ. *AC பயன்படுத்தும்போது கதவுகள், ஜன்னல்களை மூடுவது அவசியம். *எங்கிருந்தும் இயக்கும் வகையில் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்களை பயன்படுத்த வேண்டும். *Eco mode, Energy Saving mode போன்றவற்றின் மூலமும் மின்சாரத்தை சேமிக்கலாம்.


