News April 7, 2024
ரீல்ஸ் எடுப்பதை தடுத்ததால் காவலர்கள் மீது தாக்குதல்

மத்திய பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலில், தடை செய்யப்பட்ட பகுதியில் நின்று 2 பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள், காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பெண் காவலர்கள் காயமடைந்த நிலையில், அந்த பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
இதை சாப்பிட்டால் ஆண்மை குறையும்… உஷார்

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருள்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் மூலப்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
News November 12, 2025
டெல்லியில் 50 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. டெல்லியில் இதுபோல, ஏற்கெனவே 2005-ல் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு பஸ்ஸில் வெடிகுண்டு இருப்பது குறித்து அறிந்த ஓட்டுநர் குல்தீப் சிங், தன் உயிரை பணயம் வைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். அதன் பிறகு வெடிகுண்டை தூக்கிவீசும் முயற்சியில் அவர் ஒற்றை கண் பார்வை மற்றும் கை, செவித்திறனை இழந்தார்.
News November 12, 2025
ராசி பலன்கள் (12.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


