News August 17, 2025

‘PMVBRY’ திட்டத்தில் ₹15,000.. யார் யாருக்கு கிடைக்கும்?

image

PM Viksit Bharat Rozgar Yojana மூலம் புதிதாக வேலைக்கு சேருவோருக்கு ₹15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 31.7.2027 வரை 3.5 கோடி பேருக்கு ₹99,444 கோடி வழங்கப்படவுள்ளது. ₹1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இதில் பயன் பெறலாம். பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்கு பிறகு முதல் தவணையும், 12 மாத சேவைக்கு பிறகு 2-வது தவணையும் கிடைக்கும். அப்ளை செய்ய இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க.

Similar News

News August 18, 2025

BREAKING: திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என திமுகவிற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அரசியலாக பார்க்கக்கூடாது. கட்சி பேதமின்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

மனசாட்சி உள்ள மக்களாட்சியை நோக்கி.. விஜய்

image

1967, 1977 வெற்றி விளைவுகளை 2026 தேர்தலிலும் காணப்போவதாக விஜய் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தவெக 2-வது மாநில மாநாடு தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிப்போம் என சூளுரைத்துள்ளார். இந்த மாபெரும் அரசியல் விளைவை நிகழ்த்தி காட்டும் பேரறிவிப்பாக மாநாடு அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: வேல்முருகன்

image

திமுக கூட்டணி தலைவர்கள் யாரும் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியை உடைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தான் சட்டப்பேரவையில் கோபமாக பேசினாலும், திமுக அமைச்சர்கள் அதற்குரிய பதிலை அளித்தனர் என்றார்.

error: Content is protected !!