News August 17, 2025

சேலம்: கூட்டணி குழப்பம் தேவை இல்லை; வேல்முருகன் விளக்கம்

image

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., “தி.மு.க. கூட்டணி கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி கோரிக்கை விடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு பற்றியும் தலைவர்கள் பேசவில்லை. சில இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆசையை வெளியிடுகிறார்கள். ஆனால், அது கூட்டணி தலைவர்கள் கருத்தாகவே இல்லையென” தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

விநாயகர் சிலை கரைக்க அதிகாரிகள் உத்தரவு

image

நாடு முழுவதும் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளில் விநாயகர் சிலை கரைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை அனுமதிக்கப்பட்ட நீர் நிலையங்களில் மட்டும் தான் கரைக்க வேண்டும் ரசாயனம் இல்லாத களிமண் சிலையை மட்டும் தயாரிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு.

News August 18, 2025

சேலம்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

சேலம் ஆகஸ்ட்19 நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடைபெறும் முகாம் இடங்கள்:
▶️நவபட்டி மாதவி மஹால் நவபட்டி.
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை ஆத்தூர்.
▶️கருப்பூர் சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை. ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா மஹால் மேற்கு ராஜபாளையம்.
▶️வீரபாண்டி விக்னேஷ்வரா திருமண மண்டபம் அரியானூர்.
▶️ எடப்பாடி ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில் அருகில் சமுதாயக்கூடம் பக்க நாடு கஸ்பா.

News August 18, 2025

கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

image

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11-இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

error: Content is protected !!