News August 17, 2025
திருவாரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News August 18, 2025
திருவாரூர் இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருவாரூர் மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 18, 2025
திருவாரூர் கோட்ட விவசாய குறைதீர் கூட்டம்

திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்து அதனை தீர்ப்பது தொடர்பாக வரும் ஆக.21ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News August 18, 2025
திருவாரூர்: இந்த தோஷம் நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

திருவாரூர் மாவட்டம் பாமணி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான நாகநாதர் மற்றும் சர்ப்ப புரீஸ்வரரை வழிபட்டால் நாக தோஷம், ராகு கேது தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!