News August 17, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பதூர் மாவட்டத்தில் இன்று (ஆக.17) இரவு ரோந்துப் பணிக்கான போலீஸார் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ரோந்துப் பணி நடைபெறும். பொதுமக்கள் அவசர உதவி மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News March 20, 2026

வாணியம்பாடி: தி.மு.க செயலாளர் மகன் கைது

image

ஆலங்காயம் அருகே சாலை வசதி குறித்து புகார் தெரிவித்த விளையாட்டுத் துறை ஆலோசகர் உமாபதி என்பவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் நேற்று (18.03.26) தாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக, ஆலங்காயம் பேரூராட்சி திமுக செயலாளர் ஸ்ரீதரின் மகனும், திமுக பொறியாளர் அணி அமைப்பாளருமான சந்தோஷ் என்பவரை நேற்று (19.03.26) போலீசார் கைது செய்தனர்.

News March 20, 2026

திருப்பத்தூர்: மனைவி கண் முன்னே கணவர் பலி

image

ஜோலார்பேட்டை அடுத்த ஓட்டப்பட்டி சேர்ந்தவர் ஸ்ரீதர் இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மாமனார் அதே பகுதியில் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று (மார்.19) இவரது மாமனார் வீடு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு போது ஸ்ரீதர் மின் ஒயர் எடுத்து சுற்றும்போது திடீரென மின்சாரத் தாக்கி மனைவி கண்முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 20, 2026

திருப்பத்தூரில் பயங்கர விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த, ரமேஷ் என்பவர் நேற்று (19.03.2026) பணி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது, வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை, அவர் கடக்க முயன்ற போது, எதிர்பாராவிதமாக அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!