News August 17, 2025
சச்சின் சிறந்த பேட்டர்.. கிரேட் பிளேயர் இல்லை: ஸ்மித்

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு SA-வின் ஜாக் காலிஸ்தான் என பதிலளித்து விவாதத்தை கிளப்பியுள்ளார் AUS வீரர் ஸ்டீவ் ஸ்மித். சச்சின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆல்ரவுண்டராக இருந்தாலும் அவர் பெரும்பாலும் பேட்டிங்கிலேயே கவனம் செலுத்தினார். ஆனால், காலிஸ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சாதனை படைத்ததால், ஸ்மித் இவ்வாறு தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.
Similar News
News March 31, 2026
AC & Induction stove-ஐ ஒரே நேரத்தில் ON செய்கிறீர்களா?

AC & இன்டக்ஷன் ஸ்டவ்வை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், ஓவர் லோட் ஆகி மின்சார விபத்துகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மின்சுமை 5-6 KW வரை அதிகரிக்கும். பாதுகாப்பு அமைப்பு(MCB) இல்லாத வீடுகளில், வயர்கள் வெப்பமடைந்து ஷார்ட் சர்க்யூட்டால் தீ விபத்து ஏற்படக்கூடும். மேலும், மின்கட்டணமும் அதிகரிக்கும். எனவே, இரண்டையும் peak hours-ல் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். SHARE.
News March 31, 2026
தொகுதி மாறியது ஏன்? செந்தில் பாலாஜி

கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியது ஏன் என்று செந்தில் பாலாஜி வெளிப்படையாக பேசியிருக்கிறார். 2021-ல் கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததால், இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என தலைமை சொன்னதால், கோவை தெற்கிற்கு மாறியதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ரிசல்ட் அன்று தொகுதி மாறியதற்கான காரணம் தெரியவரும் எனவும் சூசகமாக சவால் விடுத்துள்ளார்.
News March 31, 2026
தல இல்லாமல் தடுமாறும் CSK!

மற்ற அணிகள் ஈசியாக 200 ரன்களை விளாசும் நிலையில், 100 ரன்களையாவது அடிக்குமா என்ற பரிதாபமான சூழலுக்கு CSK தள்ளப்பட்டு விட்டது. தோனி இல்லாமல் CSK தடுமாறுகிறது என ரசிகர்கள் கூறுவதில் கிட்டத்தட்ட உண்மை உள்ளது. ஆம், தோனி இல்லாமல் இதுவரை IPL-ல் CSK, 6 மேட்ச்சில் விளையாடியுள்ளது. அதில், ஒன்றில் மட்டுமே (DC-க்கு எதிராக, 2010) வெற்றி பெற்றுள்ளது. CSK அணி வெற்றி பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்?


