News August 17, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கலில் இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் காரணமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று ஆகஸ்ட் 16ந் தேதி இதன் விலை ரூ.4.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

Similar News

News March 6, 2026

ராசிபுரம் அருகே விபத்து: பெண் பலி

image

ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னபொண்ணு (75) என்ற மூதாட்டி, சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய நபர் குறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

நாமக்கல்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாகக் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கான ஆய்வாளர்கள் மற்றும் வாகன ரோந்து அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!