News August 17, 2025
ஆசிய கோப்பை: இதுதான் இந்திய அணியா?

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அணிக்கு தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. *பேட்ஸ்மென்: அபிஷேக், திலக் வர்மா, சூர்யகுமார், சுப்மன் கில், ரிங்கு சிங். *கீப்பர்: சாம்சன், ஜிதேஷ் ஷர்மா. * ஆல்ரவுண்டர்: பாண்ட்யா, அக்சர், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே / நிதிஷ். பவுலர்கள்: பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் / பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
Similar News
News August 18, 2025
வீண் செலவுகளுக்கு தமிழகம் முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின்தங்கியுள்ள தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் முதலிடத்தில் இருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனம் உருவாக்குவதற்காக ₹4,155.74 கோடி மட்டுமே செலவிட்டிருப்பதாகவும், இது கடந்த நிதியாண்டைவிட 17.57% குறைவு என்றும் தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களில் இது உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
தடகள வீரர் ஜெசி ஓவன்ஸ் பொன்மொழிகள்

*நம் அனைவருக்கும் கனவுகள் இருக்கும். ஆனால் கனவுகளை நனவாக்க, மிகுந்த உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, சுய ஒழுக்கம் மற்றும் முயற்சி தேவை.
*விளையாட்டுத்துறையில் பிறக்கும் நட்புகள் தான் போட்டியின் உண்மையான தங்கம். விருதுகள் அரிக்கப்பட்டுவிடும், நண்பர்கள் தூசியை சேகரிப்பதில்லை.
* மனிதர்களுக்கு இடையேயான மதிப்புள்ள ஒரே பிணைப்பு அவர்களின் மனிதாபிமானம் மட்டுமே.
News August 18, 2025
அதிமுகவுக்கு செக் வைக்க திமுக புது முயற்சி?

திமுக வெற்றியை தடுக்க அதன் கூட்டணி கட்சிகளை வளைப்பதில் அதிமுக ஆர்வம் காட்டுவது போல், திமுகவும் ஒரு புது யுத்தியை கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக தலைமை மீது செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, ஆர்.காமராஜ், மணிகண்டன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை திமுகவுக்கு கொண்டு வர நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.