News August 17, 2025
PMK-வினர் மனங்களை எக்ஸ்ரே எடுத்து கூட்டணி: ராமதாஸ்

CM ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார். 2026 தேர்தலில் இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமையும் என்றார். மேலும், பாமகவினரின் மனங்களை எக்ஸ்ரே எடுத்து பார்த்து அனைவரது மனங்களும் குளிரும் வகையில் கூட்டணி முடிவை எடுப்பேன் என உறுதியளித்தார். குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 4, 2026
விஜய் என்னை எட்டி உதைத்தார்.. பரபரப்பு பதிவு

விஜய்யின் Ex உதவியாளர் டி.ஆர்.ரமேஷ் அளித்த பேட்டி தற்போது வைரலாகிறது. அதில், விஜய் ஒருநாள் கோபமாக போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சாப்பாடு பரிமாறினேன். உணவில் ஒரு முடி இருந்ததற்காக என்னை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. ஆனால், மறுநாள் கூட இதற்காக என்னிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவை தற்போது பலரும் பகிர்கின்றனர்.
News March 4, 2026
திமுக + காங்கிரஸ்.. கூட்டணியில் மாற்றம்

திமுக – காங்., கூட்டணி இழுபறி நிலையிலேயே நீடிக்கிறது. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை என முக்கிய தலைகள் நேற்று அறிவாலயம் நோக்கி அடுத்தடுத்து விரைந்ததும் கூட்டணி முடிவாகும் என கூறப்பட்டது. முன்னதாக, 25 தொகுதிகள் கொடுக்கவே திமுக தயாராக இருந்தது. இந்நிலையில், திடீர் மாற்றமாக 28 + 1 தொகுதி அளிக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாம்.
News March 4, 2026
தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கும் தமிழக காங்கிரஸ்

டெல்லி தலைமையிடம் இருந்து அறிக்கை வந்ததும், அறிவாலயத்தில் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்வோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கூட்டணியில் இழுபறியோ, பிரச்னையோ இல்லை; கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என கூறினார். திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று உறுதியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் காலதாமதம் நீடிக்கிறது.


