News August 17, 2025
கடலூர்: டிகிரி போதும்… LIC நிறுவனத்தில் வேலை

கடலூர் மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <
Similar News
News April 3, 2026
அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளிட்டுள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்.7ம் தேதி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் என தெரிவித்துள்ளார்.
News April 3, 2026
பொது பார்வையாளர் மாற்றம் – ஆட்சியர் தகவல்

புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த கார்த்திகே தான்ஜீ இந்திய தேர்தல் ஆணையத்தால் மாறுதல் செய்யப்பட்டு, தற்போது அசிதா மிஸ்ரா பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆயத்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 3, 2026
கடலூர்: வீடு வீடாக தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல்

மகளிர் திட்டம்- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடந்த தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவு பதிவான 79 மற்றும் 82-வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நேற்று நூதன விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தேர்தல் திருவிழா அழைப்பிதழை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


