News August 17, 2025

காதலிக்காக மனைவியை துடிதுடிக்க கொன்ற BJP தலைவர்!

image

காதலியுடன் பழக மனைவி இடையூறாக இருந்ததால், BJP தலைவர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் அஜ்மீரில் ரோஹித் சைனி (28), சஞ்சுவை(25) கொலை செய்து, அதனை கொள்ளை சம்பவம் போல செட்டப் செய்து நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ரோஹித்தின் காதலி ரிது சைனியின் (25) வற்புறுத்தலின் காரணமாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரோஹித் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது.

Similar News

News August 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 431 ▶குறள்: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. ▶ பொருள்: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

News August 18, 2025

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா: எல்.முருகன்

image

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்கிறார் என எல்.முருகன் விமர்சித்துள்ளார். கூட்டணியில் இருந்து M.P, MLA ஆக வேண்டும் என்பதற்காக பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கு என்ன என்ற எண்ணத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்களின் பிரச்சனைகள் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்றும், மாறி மாறி பேசி வருவதால் அவர் நிலையாக இல்லை என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

News August 18, 2025

ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்தவர்கள் RSS: கார்கே

image

சுதந்திர போராட்ட வீரர்கள் PM மோடியின் பேச்சைக் கேட்டால் வெகுண்டு எழுந்துவிடுவார்கள் என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் RSS-க்கு பங்கு உண்டு என மோடி சுதந்திர தின உரையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய கார்கே, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை ஆங்கிலேயர்களுக்கு அளித்தவர்கள் RSS என்றும், அவர்களில் சிலர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!