News August 17, 2025
தி.மலை: பெண்கள் பாதுகாப்புக்கு இதை பண்ணுங்க

தி.மலை: நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தி.மலை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9840369614) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு
Similar News
News August 18, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (17.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
தி.மலை: காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

தி.மலை மாவட்டம் செங்கம் வட்டம் பிஞ்சூர் கிராமத்தில் சுமார் பத்து நாளைக்கு முன்பு காணாமல் போன (லேட்) ஏழுமலை தந்தையான குப்புசாமி கண் குறைபாடு காரணமாக காணாமல் போனார். அவரை ஊர் எங்கும் சுற்றி பொதுமக்களும் காவல்துறையும் தேடி வந்தனர். இந்நிலையில், குப்புசாமி விவசாயக் கிணற்றில் பிணமாக மிதந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் சம்பவம் குறித்து செங்கம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
News August 17, 2025
தி.மலை: இலவசமாக AI பயிற்சி; ரூ.4.5 லட்சம் சம்பளம்

தி.மலை மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள் <