News August 17, 2025
கீ கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம்: ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக BJP மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலம் CPI மாநாட்டில் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக் கூத்தாக்கி விட்டதாக சாடினார். ECI ஆணையர் நியமனத்தில் சதி செய்கிறார்கள் என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்கிறார்கள் என கூறினார். BJP உடன் இணைந்து ECI வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக INDIA கூட்டணியினர் கூறி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் பணக்கார மாவட்டம் எது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் வரையிலான கணக்கீடாகும். இதில் எந்தெந்த மாவட்டங்கள் டாப்பில் இருக்கின்றன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் இந்த தகவலை தெரிஞ்சிக்காம, நண்பர்களுக்கும் அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
News March 4, 2026
சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது. நேற்று மொத்த விலையில் முட்டை ஒன்று ₹4.60-க்கு விற்பனையான நிலையில், இன்று 30 காசுகள் குறைந்து ₹4.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக துபாய், கத்தார், ஓமன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டதால், விலை கணிசமாக சரிந்துள்ளது.


