News August 17, 2025

நெகிழி இல்லா மாவட்டம் விழிப்புணர்வு

image

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நெகிழி இல்லா மாவட்டம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வளைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் பார்வையிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் உள்ளார்.

Similar News

News August 18, 2025

திருவள்ளூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கி புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி (ம) வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ. 72,000 சம்பளம் வழங்கப்படும். <>இந்த லிங்கில்<<>> வரும் 20.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17439769>>தொடர்ச்சி<<>>

News August 18, 2025

திருவள்ளூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் (அ) 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 18, 2025

திருவள்ளூர்: மாமூல் கேட்ட வி.சி.க நிர்வாகி கைது

image

சென்னையை சேர்ந்த விஸ்வநாத் நுங்கம்பாக்கம் துப்பாக்கி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பி.ஆர்.ஓ வாக உள்ளார். நேற்று முன்தினம் அங்கு வந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட வி.சி.க துணை செயலாளர் குமார் திருமாவளவன் பிறந்தநாளுக்கு நிதி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்க குமார் அவரை மிரட்டியுள்ளார். புகாரின் பெயரில் மணவாள நகர் போலீசார் குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!