News August 17, 2025

பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த இலவச பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு “பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Similar News

News March 4, 2026

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (04-03-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.128- ஆகவும், பண்ணை கோழி விலை ரூ.62- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News March 4, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு !

image

நாமக்கல்லிலிருந்து வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி போர்காரணமாக, முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் 77 கன்டெய்னர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், நாமக்கல்லில் முட்டை விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

error: Content is protected !!