News April 7, 2024
முதல்வர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சந்திரபாபு நாயுடு குறித்து தரக்குறைவாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரசாரத்தின்போது, பிரபல படங்களின் கொடூர கதாபாத்திரங்களுடன் சந்திரபாபு நாயுடுவை ஒப்பிட்டு ஜெகன் மோகன் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News March 19, 2026
பெரம்பலூர்: வாக்கு சாவடி மையங்களில் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் நேகா பன்சால், (ம) குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அமர் பகதூர் சிங் ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் (ம) பாதுகாப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News March 19, 2026
அரசியலில் குதித்த மூன்று நடிகைகள்

கேரளாவில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தமிழில் ‘சித்தா’ படத்தில் நடித்த நடிகை அஞ்சலி நாயர், கேரளாவின் திருப்புனித்துரா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், பெரும்பாவூர் தொகுதியில் நடிகை லட்சுமி பிரியா, ஏட்டுமானூர் தொகுதியில் நடிகை வீணா நாயர் போட்டியிடுகின்றனர். NDA கூட்டணியில் இணைந்த டுவென்டி-20 கட்சியின் சார்பாக 3 பேரும் போட்டியிடுகிறார்கள்.
News March 19, 2026
அழைப்பு VS வதந்தி

தவெக கூட்டணி முடிவு குறித்த <<19418800>>விஜய்யின் பேச்சுக்கு<<>> ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. வதந்தி பரப்பினர், மதவாத சக்திகளோடு கூட்டணி இல்லை என சொன்ன விஜய், அதனைக் கூற ஒரு வாரம் நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி 90 தொகுதிகள், 2.5 ஆண்டுகள் CM பதவி ஆஃபரை கொடுத்தனர் என <<19412409>>ஆதவ் அர்ஜுனா<<>> சொன்னது விஜய்க்கு தெரியாமல் அவர் நடத்திய கூட்டணி பேச்சா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


