News August 17, 2025
நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (17-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 95-க்கும், முட்டை கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.97-ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.4.90- ஆகவும் நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Similar News
News November 7, 2025
கொல்லிமலையில் அறிமுக கலை வகுப்புகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் விரிவாக்க மையம் கொல்லிமலை குழந்தைகளுக்கான அறிமுக கலை பயிற்சி வகுப்பு, கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கத்தில் நவம்பர் மாதம் முழுவதும், அனைத்து சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் இன்று நவம்பர் 6ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது இதனால் இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டது. எனவே இன்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.55 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது குறிப்பிடதக்கது


