News April 7, 2024
வேலூர் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் பதிவு

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) அதிகபட்ச வெயிலாக இன்று 106.3°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், இன்று வேலூர் தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் IUCAW, SJHR மற்றும் ACTU போலீசாரின் சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமுதாயத்தில் அனைவரும் சமம் என்பது குறித்தும், வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம், மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
News September 17, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் காட்பாடி கே..வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, மேல்பட்டி, அணைக்கட்டு மற்றும் முக்கிய இடங்களில் பொது மக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (செப்டம்பர்- 17) இரவு வந்த பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 17, 2025
வேலூரில் இப்படி ஒரு இடமா…!

வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஒன்று வேலூர் கோட்டை. இக்கோட்டையானது கி.பி.1526-கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டை தென்னிந்தியாவின் இராணுவக் கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடம் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. உங்க ஊர் பெருமைகளை அறிய ஷேர் பண்ணுங்க.