News August 17, 2025
குமரி வேளாண் உள்கட்டமைப்பு: ரூ. 66 கோடி இலக்கு நிர்ணயம்

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ. 45 கோடியும் என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ஆர். அழகு மீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
குமரி : இதை செய்யாதீர்கள்.. எஸ்பி எச்சரிக்கை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அனைத்து மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் கெலன் முரேன். இவர் கன்னியாகுமரியில் நிலம் கிரையம் பெற்றுள்ளார். அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ். பி. யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 23 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 10, 2026
குமரி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

இட்டகவேலி பகுதியைச் சேர்ந்தவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி வில்சன்(56). இவர் அருகில் உள்ள வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கச்சென்றார். அப்போது மரத்தில் ஏறும்போது தென்னை ஓலை அருகில் உள்ள மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மரத்திலிருந்து வில்சன் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.


