News August 17, 2025
மீனாட்சிபுரம்: கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அப்பகுதியில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகின்றார். இந்த பண்ணை அருகே ராமசாமி, பிரபாகரன், முனீஸ்வரன், பாபு ஆகியோரது நிலம் உள்ளது. தங்களது நிலம் அருகே கோழிப்பண்ணை செயல்படுவது பிடிக்காமல் 4 பேரும் பண்ணைக்குள் பூனைகளை விட்டதுடன் குமரேசனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். போடி தாலுகா போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (ஆக.16) பதிவு செய்து விசாரணை.
Similar News
News March 21, 2026
தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

தேனி, க.விலக்கு போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்.20) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தனம்பட்டி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த சிவனேசன் (26) என்ற இளைஞரை சோதனை செய்த பொழுது அவர் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிவனேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News March 21, 2026
கம்பம்: மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

கம்பம் மெட்டு சோதனை சாவடியில் நேற்று உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 40 மூட்டைகளில் 2,020 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக கம்பம் பகுதியை சேர்ந்த குமரேசன், விஜய் (28) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 20, 2026
தேனி : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <


