News August 17, 2025
குமரியில் அடிக்கடி மின்தடையா? இனி கவலை வேண்டாம்..!

குமரி மக்களே.. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே #9498794987 என்ற எண்ணுக்கு கால் பண்ணி உங்க ஏரியாவுல எங்க மின்தடைனு தெரியப்படுத்துங்க. உடனே மின்சார துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க உதவுவாங்க. உங்க நண்பர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.
Similar News
News March 4, 2026
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (மார்ச் 4) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 22.27 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 22.20 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 4.66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 4.75 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 524 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
News March 4, 2026
குமரி: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!

பளுகல் அருகே புன்னாக்கரை பகுதியைச் சேர்ந்தவர் டாளி (62). இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் டாளி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது டாளி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பளுகல் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
குமரி: நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு.!

சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (27). இவர் வெள்ளாங்கோடு முந்திரி ஆலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தங்கச் சங்கிலி பிடித்துக் கொள்ளவே, ஆறரை பவுன் கொள்ளையர்கள் கையில் சிக்கிக் கொண்டது. இது குறித்து அருமனை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


