News August 17, 2025
சென்னையில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
Similar News
News March 3, 2026
சென்னையில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

சென்னை மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
சென்னைக்கு புதிய பறக்கும் ரயில் சேவை!

பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் வருகிற மார்ச் 5ஆம் தேதி பாதுகாப்பு கமிஷனர் சோதனை மேற்கொள்கிறார். வருகிற மார்ச் 7ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் 10ஆவது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்கு ரயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News March 3, 2026
JUST IN: சென்னையில் கோர விபத்து!

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று(மார்ச் 3) அதிகாலை இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளானன. இந்த விபத்தில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஜூனு(21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.


