News August 17, 2025

NDA அணியில் PMK, DMDK இணைய வேண்டும்: கஸ்தூரி

image

திமுகவை வீழ்த்த, NDA கூட்டணியில் PMK மற்றும் DMDK இணைய வேண்டும் என நடிகை கஸ்தூரி விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை எனவும், தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 18, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 18 – ஆவணி 2 ▶ கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶ குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: சுன்யதிதி ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.

News August 18, 2025

விரக்தியின் உச்சத்தில் அன்புமணி: அமைச்சர்

image

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணி தோற்றதால் இந்த மாவட்டத்தை ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என அன்புமணி தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய அமைச்சர் MRK பன்னீர் செல்வம், தருமபுரியை புறக்கணித்திருந்தால் 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு எப்படி 100 சதவீதம் வெற்றிக் கிடைத்திருக்கும் என கேட்டார். மேலும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் எனவும் விமர்சித்தார்.

News August 18, 2025

சமூக அர்ப்பணிப்புக்கு கிடைத்த மணிமகுடம்: EPS வாழ்த்து

image

NDA கூட்டணியின் சார்பில் தமிழர் ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ள PM மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு நன்றி என EPS தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த சமூக சேவை மற்றும் மக்கள் மீதான அர்ப்பணிப்புக்கு கிடைத்த மணிமகுடம் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

error: Content is protected !!