News August 17, 2025
சம்பா பருவத்தில் இயந்திர நடவுக்கு ரூ.2,400 மானியம்: வேளாண் துறை

நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர்களை இயந்திர நடவும் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.2,400 அல்லது ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6000 பின்னேற்பு மானியமாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக மையம் (அ) உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளவும் என்று விராலிமலை வேளாண் உதவி இயக்குநர் ப.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
புதுக்கோட்டை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News August 17, 2025
புதுகை: ரூ.88,000 சம்பளத்தில் LIC-ல் வேலை!

புதுகை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ₹88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <
News August 17, 2025
புதுக்கோட்டையில் 4 பேர் மீது குண்டர் சட்டம்

ஆலங்குடியில் ஜூலை 16ஆம் தேதி டாஸ்மாக் முன்பு ரஞ்சித் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அருவாளால் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் ஸ்ரீதர், கலையரசன், வெங்கடேஷ், மதிவாணன் ஆகிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி அபிஷேக் குப்தா பரிந்துரையின் பேரில் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.