News August 17, 2025
BCCIக்கு பும்ரா எழுதிய முக்கிய கடிதம்!

செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட்டு விடும். ரசிகர்களிடையே பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், அவர் BCCI-க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில், ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பைக்கான பெஸ்ட் பிளேயிங் XI-ஐ கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News August 17, 2025
2-வது மனைவியை பிரிந்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது. முதல் மனைவியுடன் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அடுத்த நாளே, கர்ப்பமாக இருக்கும் 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா குழந்தையின் பெயரை அறிவித்தார். இந்நிலையில், தனது ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஜாய் கிரிசில்டாவை நீக்கியுள்ளார் ரங்கராஜ். இதனால், அவரை ரங்கராஜ் கழற்றி விட்டுவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News August 17, 2025
ஆசிய கோப்பை: இதுதான் இந்திய அணியா?

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அணிக்கு தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. *பேட்ஸ்மென்: அபிஷேக், திலக் வர்மா, சூர்யகுமார், சுப்மன் கில், ரிங்கு சிங். *கீப்பர்: சாம்சன், ஜிதேஷ் ஷர்மா. * ஆல்ரவுண்டர்: பாண்ட்யா, அக்சர், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே / நிதிஷ். பவுலர்கள்: பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் / பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
News August 17, 2025
திமுகவுடன் கைகோர்க்கும் பாமக? விசிக நிலை என்ன?

பாமகவின் பொதுக்குழு கூட்டம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நிகழ்ந்தேறியது. இது வெறும் டிரெய்லர் தான் என்பதை போல, இன்னும் பல சுவாரஸ்யங்களால் சூடுபிடிக்கவுள்ளது அரசியல் களம். அதாவது, கூட்டணிக்கு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறாராம் ராமதாஸ். இந்நிலையில், திமுக கூட்டணியில் பாமகவை இணைக்க முடிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால், விசிக என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.