News April 7, 2024
சண்டே சமையல் டிப்ஸ்..!

ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும். கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும். கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருக்க சிறிதளவு உப்பை கலந்து வைக்கலாம்.
Similar News
News March 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 638
▶குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
▶பொருள்: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.
News March 20, 2026
தண்ணீருக்கு போர் போட கிடைத்த ஃப்ரீ கேஸ் கனெக்ஷன்!

கிணறு வெட்ட போய், பூதம் கிளம்பியது என்பார்கள். அப்படித்தான் இவர்களுக்கு கேஸ் கனெக்ஷன் கிடைத்துள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த ரத்தினம்மா, கடந்த 2011-ல் தண்ணீருக்காக Bore போட்டுள்ளார். தண்ணீர் வராததால், குழாயை மூடும் போது மீத்தேன் வாயு இருப்பது தெரியவந்தது. அந்த கேஸ் கனெக்ஷனை கிச்சனுக்கு லைன் கொடுத்து, 10 ஆண்டுகளாக ரத்தினம்மா குடும்பம் சமைத்து வருகிறது. இதனால், ஆண்டுக்கு ₹10,000 சேமிக்கிறார்களாம்.
News March 20, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


