News August 17, 2025
கட்சி பொறுப்பில் இருந்து முத்தரசன் விடுவிப்பு?

இந்திய கம்யூ., கட்சியின் மாநில பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 75 வயதான முத்தரசன், 3 முறை மாநிலச் செயலாளர் பதவியை வகித்துவிட்டார். இதனால், இன்று சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில், துணை நிர்வாகப் பொறுப்பில் உள்ள வீரபாண்டியன், சந்தானம் அல்லது பெரியசாமி ஆகியோரில் ஒருவர் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 3, 2026
அபிஷேக்… உங்கள் திறமை எங்கும் போகாது: பாண்டிங்

நடப்பு டி20 WC-ல் 6 போட்டிகளில் விளையாடி 3 டக் அவுட் உள்பட வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தடுமாறி வருகிறார். இந்நிலையில், சில நேரங்களில் ஒரு சிறிய சரிவை சந்திக்கும்போது, தினமும் ஒன்றரை மணி நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவது எப்போதும் சிறந்ததல்ல என்றும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம்; உங்கள் திறமைகள் எங்கும் செல்லாது எனவும் அபிஷேக்கிற்கு பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.
News March 3, 2026
பள்ளிகள் 10 நாள்கள் லீவு.. அரசின் கூடுதல் குட் நியூஸ்

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இந்த முறை அதிக நாள்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். வழக்கமாக 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24-ம் தேதிக்குள் ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இம்முறை ஏப்., 2-ம் வாரத்திற்குள் தேர்வுகள் முடிவடையுமாம். இதனால், மேலும் 10 நாள்கள் வரை விடுமுறை கிடைக்கும். SHARE IT
News March 3, 2026
குவைத், ஓமனில் இந்தியர்களின் நிலை என்ன? PM ஆலோசனை

ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், குவைத் மற்றும் ஓமன் நாட்டு தலைவர்களுடன் PM மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அங்குள்ள அசாத்தியமான சூழல் குறித்து கேட்டறிந்த மோடி, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசித்துள்ளார். ஏற்கெனவே பஹ்ரைன் மற்றும் அபுதாபி இளவரசருடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது ஈரானின் தாக்குதலுக்கு அவர் <<19276042>>கண்டனங்களையும் <<>>பதிவு செய்திருந்தார்.


