News August 17, 2025
நெல்லை அடிப்படை வசதிகளுக்கு புகார் எண்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் அடிப்படை வசதிகளை தெரிவிக்கவே வணக்கம் நெல்லை என்ற Whatsapp சேனல் உருவாக்கபட்டுள்ளது. சேதமடைந்த சாலை, குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை குறித்து “வணக்கம் நெல்லை” 97865 66111 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளியுங்க.. நீங்கள் அளிக்கப்படும் புகார்கள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கபட்டு தீர்வு காணப்படும். SHARE பண்ணுங்க..!
Similar News
News November 12, 2025
BREAKING நாய் கடித்த நெல்லை இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(31). இவர் காவல்கிணறு பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை நாய் கடித்தது. இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 12, 2025
நெல்லை: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..
News November 12, 2025
நெல்லை: பல் பிடுங்கிய விவகாரம் – உச்சநீதி மன்றம் கேள்வி

அம்பை சரகத்தில் ஏ எஸ் பி யாக இருந்த பல்வீர் சிங் பற்கள் பிடுங்கியதாக குற்றச்சாட்டில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளையில் பல்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சமீம் அகமது மனுதாரர் போதைப்பொருள் கடத்தல் தடுத்து நடவடிக்கைக்காக உயர் அதிகாரி பாராட்டை பெற்றிருக்கிறார். எஸ் ஐ அளித்த புகாரில் எவ்வாறு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என கேள்வி எழுப்பினார்.


