News August 17, 2025

தர்மபுரியில் 1,705 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா

image

தர்மபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ₹1705 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிக்கப்பட்ட திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ₹3458.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 15, 2025

தருமபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

image

தருமபுரியில் வரும் நவ.18, 19, 20 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். அதன்படி, பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி பேரூராட்சிகளிலும், பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 68 பஞ்.,களிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரியில் ஐடிஐ தேர்வு நடக்கும் இடங்கள்!

image

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஐடிஐ லெவல் 2 தேர்வு நாளை (நவ.15) பி .பள்ளிப்பட்டி சீனிவாசா பொறியியல் கல்லூரி, பென்னாகரம் நல்லனூர் ஜெயம் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12. 30 மணி வரை மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், 250 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

News November 15, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.14) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன், தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் குமார் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!