News August 17, 2025
ED-யை கண்டு அச்சத்தில் திமுக அமைச்சர்கள்: செல்லூர் ராஜு

திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ED சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக்கொலையில் நீதி கேட்டு திருமாவளவன் போராடினாரா என கேள்வி எழுப்பிய அவர், சமீபகாலமாக கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
Similar News
News August 17, 2025
தவறான புகாரால் எங்களை மிரட்ட முடியாது: ஞானேஷ்குமார்

அரசியலமைப்பின் வழியில் தன்னாட்சி அமைப்புடன் இயங்கும் தங்களை தவறான புகாரால் யாரும் மிரட்ட முடியாது என ECI தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். BJP-க்கு ஆதரவாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ECI, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
News August 17, 2025
பொன்னியின் செல்வன் போல் திராவிட மாடல் ஆட்சி: ரகுபதி

அசல் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குகளைச் செலுத்தினாலே திமுக வென்றுவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். CM தொகுதியில் 9,000 போலி வாக்குகள் இருந்ததாக <<17426871>>அனுராக்<<>> தாக்கூர் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, தங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை என்றார். பொன்னியின் செல்வனைப் போல் 2-ம் பாகம், 3-ம் பாகம் என திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
News August 17, 2025
டெய்லி எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்றீங்க’னு தெரியணுமா?

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நீங்க போன் யூஸ் பண்றீங்க’னு, எந்த App-ல் மூழ்கி போயிருக்கீங்க’னு தெரிஞ்சிக்கணுமா? உங்க போனிலேயே இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் Settings-> Digital Wellbeing option சென்று பாருங்க. இது Iphone-களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நீங்க எவ்வளவு நேர விரையும் பண்றீங்க என புரியும். SHARE IT.