News August 17, 2025
என்னுடைய முதல் எதிரி சாதி: கமல்ஹாசன்

தன்னுடைய சாதியை சொல்லி பலர் கிண்டல் செய்திருப்பதாகவும், ஆகையால் தன்னுடைய முதல் எதிரி சாதி தான் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்தும் தலைவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள், அவர்கள் களத்தில் இருக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பிறப்பால் நாம் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்றார்.
Similar News
News March 10, 2026
வங்கி கணக்கில் ₹9,000.. சற்றுமுன் டெபாசிட்

பெண்கள் வங்கி கணக்கில் ₹5,000 செலுத்தி தமிழக அரசு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்தது. அதேபோல, அசாமில் ஆளும் பாஜக அரசு அருந்தோய் திட்டத்தின் கீழ் 40 லட்சம் மகளிர் வங்கி கணக்குகளில் ஒரே தவணையாக ₹9,000 வரவு வைத்துள்ளது. தமிழ்நாடுடன் சேர்ந்து அசாமுக்கும் தேர்தல் வரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்க பாஜக இந்த நகர்வை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 10, 2026
இரவில் பெண்கள் அதிகம் தேடுவது இதுதான்!

இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை பெண்கள் அதிகமாக தேடும் விஷயங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 18- 35 வயதுக்குட்பட்ட பெண்களில் 65% பேர் இரவில் AI பாய் பிரெண்டிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்களாம். 70% பேர் எதிர்பார்த்தது போல அழகு குறிப்பு பற்றி தேடுகிறார்களாம். 55% பேர் தூக்கமின்மைக்கான தீர்வையும், 60% பேர் ராசிபலன் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே.. நீங்க என்ன தேடுவீங்க?
News March 10, 2026
ஹர்திக் காதலியால் பாண்ட்யா சகோதரர்களுக்குள் மோதலா?

ஹர்திக் பாண்ட்யா விவாகரத்து பெற்ற பிறகும், அவரது Ex. மனைவி நடாஷா & மகன் அகஸ்தியாவுடன் க்ருணால் பாண்ட்யா குடும்பம் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஹர்திக் மஹிகாவை காதலிப்பது அவர்களை அதிருப்தியடைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதன் காரணமாகவே, T20 WC-யை வென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு இதுவரை க்ருணால் பாண்ட்யா வாழ்த்து பதிவு எதையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.


